மிகவும் குறைவான விலையில் விமான டிக்கெட் பெறுவது எப்படி தெரியுமா? இதோ முழுத் தகவல்

தற்போது இருக்கும் பரபரப்பான உலகத்தில், மக்களுக்கு எல்லாமே அவசரமாகத் தான் இருக்கிறது. குறிப்பாக போக்குவரத்து விஷயங்களில் மக்கள் அதிக கவனம் செலுத்துவதில்லை.

தங்களுடைய பயணத்தின் கடைசி கட்டத்தின் போது தான், டிக்கெட் புக் செய்வது போன்றவைகள் எல்லாம் செய்கின்றன.

அந்த வகையில் விமான பயணம் செய்வோம் குறைந்த கட்டணத்தில் விமான டிக்கெட் புக் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

  • பயணத்துக்கு மூன்று வாரங்களுக்கு முன்பே முன்பதிவு செய்தல்
  • வார இறுதியில் புக்கிங் செய்தல்
  • வெள்ளிக்கிழமை இரவு ஹோட்டல் வேண்டுமென்றால் முன்பதிவு செய்தல்
  • வியாழன் அல்லது வெள்ளி பயணத்தைத் தொடங்குதல்

30 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்தல், வார நாட்களில் பயணம் செய்தல் ஆகியவை பயனாளர்களுக்கு 10 சதவிகிதம் வரையிலான டிக்கெட் கட்டணம் மிச்சமாகும்.

வார இறுதி நாட்களில் விமான டிக்கெட்டை எகானமி வகுப்பில் முன்பதிவு செய்வதால் 20 சதவீதம் வரையில் சேமிக்கவும் முடியும். வியாழன், வெள்ளிக்கிழமைகளில் முன்பதிவு செய்தால் கட்டணம் அதிகப்படியாகவே இருக்கும்.