மஹிந்த போடும் மாஸ்டர் பிளான்! ஏற்றுக்கொள்வாரா மைத்திரி?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து ஆட்சியமைக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய வெற்றி பெறுவதன் மூலம், பிரதமராக மஹிந்த ராஜபக்ச பிரதமராகவும், பிரதி பிரதமராக சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நியமிக்கப்படவுள்ளனர்.

பிரதி பிரதமர் பதவி அரசியலமைப்பில் இல்லை. எனினும் இந்த பதவியை நியமிக்க முடியும். அதற்கான அதிகாரம் தொடர்பில் இரண்டு தரப்பும் கலந்துரையாடல் மேற்கொண்டு தீர்மானிக்கும். அவசியம் ஏற்பாட்டால் பிற்காலத்தில் அந்த பதவியை அரசியலமைப்பில் உள்ளடக்க முடியும்.

இது தொடர்பான யோசனையை நான் சமர்ப்பித்துள்ளளேன. இருதரப்பு அரசியல் கட்சியின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளும் மேற்கொண்டதா வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.