கொய்யாப்பழ ஆசையால் பரிதாபமாக பலியான நான்கு வயது சிறுவன்!

பொத்துவில் பகுதியில் கொய்யாப் பழம் பறிக்க மரத்தில் ஏறிய சிறுவன் ஒருவன் மரத்திலிருந்து தவறி கிணற்றில் விழுந்து உயிாிழந்துள்ளான்.

பொத்துவில் – ஆர். எம். நகர் பகுதியில் நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறுவனின் வீட்டின் அருகில் உள்ள கிணற்றின் அருகில் காணப்படும் கொய்யா மரத்தில் ஏறி பழங்களை பறிக்க முற்பட்ட போதே குறித்தச் சிறுவன் கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மொஹமட் ஷியாத் மொஹமட் ஹதீத் எனப்படும் நான்கரை வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

சம்பவம் தொடர்பான மரண பரிசோதனைகள் பொத்துவில் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.