கோத்தபாயவின் சுவரொட்டிகள் அவசரமாக ஏன் கிழிக்கப்பட்டன

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் நாடு முழுவதும் அவருக்காக வைக்கப்பட்டிருந்த பதாதைகள், சுவரொட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சுகததாச விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் உரையாற்றிய கோத்தபாய ராஜபக்ச, தேர்தல் சுவரொட்டிகள், பதாதைகள் வைப்பதில்லை என மக்களுக்கு தெளிவாக கூறியிருந்தார்.

இதனால், அவரது உத்தரவின் பேரில் நகரங்கள், கிராமங்களில் வைக்கப்பட்டுள்ள சுவரொட்டிகள், பதாதைகளை அங்குள்ள கட்சியினர் அகற்றியுள்ளனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச எனவும், அவர் வழங்கும் முன்னுதாரணம் அவரது வார்த்தைகள் மீது மக்கள் நம்பிக்கை விதத்தை காண முடிவதாகவும் எஸ்.எம்.சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.