நல்லூரில் மின்சாரம் தாக்கிய முதியவர் உயிரிழக்கவில்லை- வைத்தியசாலை நிர்வாகம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வீதியில் மின்சாரம் தாக்கிய முதியவர் உயிரிழக்கவில்லை என்று தெரிவித்துள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம், அவர் சுகநலத்துடன் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.

நல்லூர் ஆலய வீதியில் மின்சாரம் தாக்கியதாக அம்புலன்ஸ் வண்டியில் அழைத்துவரப்பட்ட செல்லத்துரை ஜெகநாதன் (வயது – 64) என்ற முதியவர் இன்று காலை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் சுகநலத்துடன் உள்ளார்” என்று வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நல்லூர் கந்தசாமி ஆலய வெளிவீதியில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமரா பொறிமுறையில் ஏற்பட்ட மின்கசிவில் சிக்கி அடியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றது.

ஆலய வீதியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்புக் கமரா ஸ்டான்ட்டில் மழை காரணமாக மின் கசிவு ஏற்பட்டுள்ளது. அதில் முதியவர் சிக்குண்டுள்ளார்.

சுயநிலைவற்ற நிலையில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு முதியவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதும் சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். எனினும் வைத்தியசாலை நிர்வாகம் அதனை மறுத்துள்ளது.