மஹரகமவைப் பறிகொடுக்கப் போகும் மஹிந்த தரப்பு! நீதிபதி கொடுத்த அதிர்ச்சி

மஹரகம நகர சபையின் நிர்வாகம் மஹிந்த ராஜபக்ஷ தரப்பிடமிருந்து பறிபோகும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷ அணியின் பொதுஜன பெரமுண கட்சியின் ஆதரவைப் பெற்று சைக்கிள் சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்ட அணி வெற்றிபெற்று நகர சபை அதிகாரத்தைக் கைப்பற்றியது.

எனினும் குறித்த சுயேச்சைக் குழுவின் உறுப்பினர்கள் மஹரகம நகர சபை நிர்வாகத்துக்குட்பட்ட பகுதியையோ குறைந்த பட்சம் கொழும்பு மாவட்டத்தையோ சேர்ந்தவர்கள் இல்லை என்பதால் அவர்கள் உள்ளூராட்சித் தேர்தல் சட்டங்களின் பிரகாரம் நகர சபை உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நகர சபை உறுப்பினர்கள் ஆட்சேபணை மனுவொன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

கொழும்பு மேல்நீதிமன்றத்தில் நடைபெற்ற குறித்த வழக்கு தொடர்பான நீண்ட விசாரணையின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி நகரசபை உறுப்பினர்களின் ஆட்சேபணையை ஏற்றுக் கொள்வதாக நீதிபதி கிஹான் குலதுங்க தீர்ப்பளித்துள்ளார்.

இதன் காரணமாக சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பல நகர சபை உறுப்பினர்களின் பதவி பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக மஹரகம நகர சபை நிர்வாகத்தை பொதுஜன சார்பு அணி இழக்கும் நெருக்கடி நிலையேற்பட்டுள்ளது.