புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கும் கிடைக்கப்போகும் வாய்ப்பு?; தயாராக இருங்கள்!

வெளிநாட்டுகளில் தொழில் புரியும் இலங்கைப் பிரஜைகளுக்கும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக கட்சி பேதமின்றி அனைவரையும் ஒன்றிணையமாறு “அக்கரையில் நாம்” என்னும் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் ஊடக சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி,

தேசிய வருவாயில் பாரியளவிலான பங்களிப்பை வழங்குபவர்களாக வெளிநாட்டில் தொழில் புரிவோர் விளங்குகின்றனர். அவர்களினால் 5 பில்லியன் ரூபாய்க்கும் அதிகளவிலான வெளிநாட்டு வருவாய் கிடைக்கப்பெறுகின்றது.

இந்நிலையில் அவர்களுடைய உரிமையை பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும்.

வெளிநாடுகளில் தொழில் புரியும் தமது நாட்டவர்களுக்கு தேர்தலின் போது வாக்களிப்பதற்கான வாய்ப்பை 115 நாடுகள் ஏற்படுத்திக்கொடுத்துள்ளன.

எமது நாட்டிலும் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் 2016 இல் மேற்கொள்ளப்பட்டன.

இதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.