பிக்பாஸ் நிகழ்ச்சியால் யாழ்ப்பாணத்தில் நடந்த விநோத சம்பவம்! மகளின் பரிதாப நிலை

தென்னிந்தியத் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியால் யாழ்ப்பாணத்தில் விநோத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்ச்சியால் நவாலிப் பகுதியில் வீடொன்றில் நாள் முழுவதும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியிலுள்ள வீடொன்றில் பழைய பாடல்கள் மீது ஈர்ப்பு கொண்ட தந்தை ஒருவர் வானொலியில் பாடல் கேட்டுக் கொண்டிருந்தார்.

அவரது மகளுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆர்வம். தந்தை பாடல் கேட்டுக்கொண்டிருந்த நேரம் பிக்பாஸ் பார்த்துக் கொண்டிருந்தார்.

தொலைக்காட்சி சத்தத்தில் தந்தைக்கு பாடல் கேட்கவில்லை. அவர் வானொலியின் சத்தத்தைக் கொஞ்சம் அதிகரித்துள்ளார். தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த மகளுக்கு பாடல் சத்தம் இடையூறாக இருந்ததால் கொலைக்காட்சி சத்தத்தைக் கொஞ்சம் அதிகரித்தார். இருவரும் மாறி மாறி சத்தத்தை அதிகரித்தமையினால் இருவருக்கும் இடையே தர்க்கம் வெடித்தது.

பொறுமை இழந்த தந்தை ஒரு கட்டத்தில் அதிரடி முடிவு எடுத்தார். வீட்டுக்கு வெளியே சென்றவர் வீட்டு மின்சார மானிக்கான பியூஸை பிடுங்கி எடுத்து சட்டைப்பையில் போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

வீடு இருளில் மூழ்க, மகளின் பிக்பாஸ் நிகழ்ச்சியும் தடைப்பட்டது. வீட்டை விட்டு பியூஸ் கட்டையுடன் சென்ற தந்தை மறுநாள் மாலை வீட்டுக்கு வந்தார். அதுவரை வீட்டில் இருந்தவர்கள் மின்சாரம் இல்லாதே இருந்துள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like