மட்டக்களப்பு வைத்தியசாலையில் தொடரும் கொடூரம்- மற்றுமொரு சிறுவனை இழந்த பெற்றோர்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பல தடவை தலைவலி கொண்டு செல்லபட்ட மாணவனின் நோயை கண்டறியாமல் வீடு வைத்தியசாலை என தினம் அலைந்து இறுதியில் சிறுவனை நடைப்பிணமாக மாறி சிறுவன் ஒருவன் மரணமடைந்துள்ளான்.

மட்டக்களப்பு செட்டிபாளையத்திலுள்ள மாணவனிற்கே இந்த அவலநிலை ஏற்பட்டுள்ள நிலையில் மகனை இழந்து பெற்றோர் அனுபவித்த சோகம் அனுபவித்த வேதனையான உணர்வுகள் வார்த்தைகளால் சொல்லிடமுடியாது.

செட்டிபாளையம் ஊற்றுமடுவை சேர்ந்த கிருஸ்ணானந்தம் தேனுஜன் எனும் 12வயது சிறுவன் பாடசாலையிலும் மிகவும் அமைதியான மாணவன். புலமைப்பரீட்சையில் அதிக புள்ளிகளை பெற்று சிறப்பான சித்தியடைந்தவன், கற்றல் அது சார்ந்த போட்டிகளில் திறமையாக எல்லோரும் விரும்பும் மாணவனாக திகழ்ந்தவன்.

இந்நிலையில் தேனுஜன் திடீரென இல்ல விளையாட்டு போட்டியில் விழுந்ததால் தலையில் உள்காயம் எற்பட்டிருக்கும் என மட்டக்களப்பு வைத்தியசாலை தனியார் வைத்தியசாலை என பெற்றோர் தங்களின் கஸ்டத்தின் மத்தியிலும் இலட்சக்கணக்கில் செலவழித்து மகனிற்கு வைத்தியம் பார்த்துள்ளனர்.

இருநாள் சென்றபின் நுண்ணுயிர் கொல்லி மருந்து சாதாரண தலையிடி ,சளி என கருத்தில்,கொண்டு சிகிச்சை வழங்கி வைத்தியசாலையிலிருந்து வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் மீண்டும் சிறுவனிற்கு தலையிடி ,வாந்தி என ஏற்பட மட்டக்களப்பு வைத்தியசாலை சென்றால் மீண்டும் செய்ததையே செய்வார்கள் என நினைத்த பெற்றோர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நம்பிக்கையிழந்து , உறவினர்கள் ஆதரவுடன் கண்டி வைத்தியசாலை அனுமதித்துள்ளனர்.

அங்கு சிறுவனை பரிசோதனை செய்த வைத்தியர்கள் அவனின் மூளையில் புற்றுநோய் கட்டி வளர்ச்சியடைந்துவிட்டதாக கூறியதோடு, 6வருடம் முதலே அதன் தொடங்கி உள்ளதாக கூறியுள்ளனர்.

சிறுவனிற்கு இப்பொழுது சத்திரசிகிச்சை செய்தால் அவனின் உயிருக்கு ஆபத்து உள்ளதென கூறி சிறுவன் கோமா நிலைக்கு செல்லாமல் இருக்க ஆலோசனை வழங்கியுள்ளனர்.

அதன்பின்னர் பெற்றோர்கள் தமது செல்ல மகனின் முகத்தை பார்த்து கொண்டிருந்தபோது, படைத்த இறைவனுக்கு பெற்றோரின் துயரம் பொறுக்கமுடியவில்லையோ என்னவோ கடந்த 20ம் திகதி சிறுவனின் உயிர் இந்த உலகைவிட்டு பிரிந்துள்ளது.

இதேவேளை சிறுவனை இழந்து தவிக்கும் பெற்றோரிற்கு யார் பதில் கூறுவார்கள்?

நோயின் அறிகுறியான கடுமையான தலைவலி ,வாந்தி என கூறி சிறுவனை பெற்றோர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கொண்டு சென்றும் ஏன் அவர்களால் சிறுவனை காப்பாற்ற முடியவில்லை?

கண்டிவைத்தியசாலையை போல் பரிசோதனை செய்ய வசதியில்லையா? அல்லது தொடர்ந்து அச்சிறுவனை பரிசோதித்த சிறுபிள்ளை வைத்திய நிபுணர் பரிசோதனைகளை செய்து பார்க்க உத்தரவுவிடவில்லையா? சிறுவனின் சாதாரண தலையிடி மூளையில் புற்றுநோய் கட்டியாக வளர்ச்சியடைந்த ஆரம்ப நிலைக்கு யார் காரணம்?

எது எப்படியோ இனியும் இப்படியான கவனயீனத்தால் எதிர்கால சந்ததிகள் அழிவது ஏற்றுக்கொள்ளமுடியாது. வாயை மூடி மௌனித்திருப்பதால் எதுவும் நேர்ந்துவிடாது என்பதை எம் சமுதாயம் என்றுதான் உணர்ந்துகொள்ளுமோ?