யாழ்பாணம், நயினாதீவு நாகவிகாரைக்கு வரும் பக்தர்கள் சுற்றுலா பயணிகளுக்கு பனம் கிழங்கு அவித்து விற்று வியாபாரம் செய்துவருகின்றார் ஓர் வயதான மூதாட்டி.
ஐம்பது ரூபா பனம் கிழங்குக்கு ஐநூறு ரூபாயை கொடுத்த போது (வேண்டும் என்றேதான் கொடுத்தேன்) சில்லறை இல்லையே என்றவரிடம் பரவாயில்லை வைத்துக் கொள்ளுங்கள் என கூறியபோது போது பதறி துடித்தபடி கூறினார்.

ஐம்பது ரூபாவுக்கு மிச்சமாக ஒரு சதம் கூட வேண்டாம். மிகுதிக்கும் பனம் கிழங்கு வாங்குவதாயின் வாங்குங்க என கூறிய அந்த தாய் உடம்பில் தெம்பிருக்கும்வரை உழைத்து சாப்பிடவே நான் விரும்புகிறேன் என்றும், என்னை பிச்சைக்காரியாக்கி விடாதீர்கள் எனவும் கூறினார் தளராத வயதிலும் தன்னம்பிக்கை இழக்காத அந்த மூதாட்டி.
ஆயிரம் சாட்டையடிகளுடனும் அவமானத்துடனுடனும் கூனிக்குறுகிப்போய்விட்டேன். இன்னும் சாகவில்லை தமிழனின் தன்மானம். தலைவணங்குவோம் தமிழன்னைக்கு….






