நடுவானில் சூரியனைச் சுற்றி ஒரு பெரிய வட்டம்! திடீரென சிம்ம வாகனத்தில் தோன்றிய பத்ரகாளியம்மன்; பரபரப்பில் மக்கள்!

இந்தியாவில் ஈரோட் பகுதியில் நடுவானத்தில் சூரியனைச் சுற்றி ஒரு வட்டம் உருவாகி, அந்த வட்டத்திற்குள் திடீரென சிம்ம வாகனத்தில் பத்ரகாளியம்மன் உருவம் தோன்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை சுமார் 11 மணியளவில் சூரியனை சுற்றி சிறிதாக ஒரு வட்டம் தோன்றியது.

இதை பொதுமக்கள் சாதாரணமாக பார்த்து கொண்டே நகர்ந்தனர்.

ஆனால் நேரம் செல்லச் செல்ல சூரியனை சுற்றி சிறிதாக தோன்றிய வட்டமானது பெரிதாகிவிட்டது.

அப்போதுதான் மக்கள் இதை கூர்ந்து கவனிக்க தொடங்கினார்கள்.

சூரியன் + அதன் ஒளி வட்டம்.. இதை தாண்டி எந்த மேகங்களும் செல்லவே முடியாத சூழல் அப்போது உருவானது. சிறிது நேரத்தில், சூரியனை சுற்றி தோன்றிய வட்டத்திற்குள் சிங்க வாகனத்தில் பத்ரகாளியம்மன் உலா வருவது போல் மேகங்களால் ஆன ஒரு உருவம் தோன்றியது .

பொதுவாக, மேகக் கூட்டங்கள் வேறு வேறு வடிவங்களில் காட்சியளித்தாலும், சூரியனின் வட்டத்திற்கு யாரும் எதிர்பார்க்காத விதமாக பத்ரகாளியம்மன் உருவம் மக்களுக்கு புதிதாகவும் வினோதமாகவும் இருந்தது. அதனால் பலர் ரசித்து மகிழ்ந்ததுடன், பக்தி பரவசத்துடன் வானத்தை நோக்கி கை கூப்பி வணங்கியவாறே நின்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like