7 வருடமாக கணவரிடம் கெஞ்சிய மனைவி… சங்கடத்தில் அரங்கேறிய தற்கொலை! பரிதவிக்கும் 3 குழந்தைகள்

இந்தியாவில் நெல்லை மாவட்டத்தில் மாமியார் வீட்டில் கழிவறை இல்லாததால் பெண் ஒருவர் தனது மூன்று குழந்தைகளை விட்டுவிட்டு தற்கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

களக்காடு அடுத்த சிதம்பரபுரத்தை சேர்ந்தவர் ஷாலினி. சசிகுமார் என்பவருடன் 7 வருடத்துக்கு முன்பு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

ஷாலினி திருமணம் முடிந்து வந்த நாளிலிருந்தே கழிவறை இல்லாமல் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார். அடிக்கடி கணவர் சசிகுமாரிடமும் இதைக் கூறிக்கொண்டு இருந்துள்ளார்.

ஆனால் கணவரோ மனைவி ஷாலினி கூறும்பொழுதெல்லாம், ஏதாவது ஒரு காரணத்தை கூறிவிட்டு கழிவறை கட்ட முயற்சி செய்யாமல் இருந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை எப்பொழுதும் போல் கழிவறையினால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் பொறுமை இழந்து வெறுத்துப் போன ஷாலினி தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பெண்ணின் தாயார் தனது பெண் அடித்துக்கொல்லப்பட்டுள்ளார் என்று பொலிசில் புகார் கொடுத்துள்ளனர்.

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் தனிநபர் கழிவறை கட்ட அரசு 12 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குகிறது. இருந்தாலும் இதை பெரும்பாலானோர் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் இப்படி உயிரைக்கொடுக்கும் அளவிற்கு துணிந்து வருகின்றனர்.

தற்போது ஒரு கழிவறையினால் ஏற்பட்ட பிரச்சினை ஒரு உயிரை பலியெடுத்தது மட்டுமின்றி 3 குழந்தைகள் தாயை இழந்து அனாதையாக தவித்து நிற்கின்றனர் என்பது கொடுமையான நிகழ்வாகும்.