பயங்கரவாத தாக்குதலின் முக்கிய சூத்திரதானியான சஹாரானின் உடல் மட்டக்களப்பு கள்ளியங்காட்டு இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருதயபுரம் கிழக்கு கிராம சேவகர், சுகாதார பரிசேதகர் மற்றும் பொலிசார் முன்னிலையில் நேற்றையதினம் சஹாரானின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது .

கள்ளியங்காட்டு இந்துமயானம், மாநகரசபையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் மாநகர சபையின் அனுமதியில்லாமல் PHI எவ்வாறு குறித்த இடத்துக்கு போனார், ? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதோடு இதற்கான முழுப்பொறுப்பையும் மாநகர சபையையே ஏற்கவேண்டும் எனவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை காத்தான்குடி பள்ளிவாசல் நிர்வாகம், சஹாரானின் உடலை பொறுப்பேற்க முடியாதென சட்டம் கொண்டுவந்துள்ளார்கள்.
இந்த நிலையில் மட்டு மாநகர சபையோ திரை மறைவில் முஸ்லிம் இன வாதியான சஹாரனின் உடலை இந்து மயானத்தில் அடக்கம் செய்துள்ளமை விமர்சனக்களை தோற்றுவித்துள்ளது.
இதேவேளை இன்று மாலை 4:00 மணிக்கு சஹரானின் உடலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கள்ளியங்காடு மயானத்தின் முன் ஒன்று திறழுமாறு அப்பகுதி மக்கல் அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.
இஸ்லாமிய தீவிரவாதி சஹாரானின் உடலை உடனடியாக மாநகர சபை அப்புறப்படுத்தி, காத்தான் குடியில் புதைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், இல்லையேல் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிவருமெனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.






