சீயோன் தேவாலய தற்கொலைக் குண்டுதாரியின் உடற்பாகங்களை கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைப்பதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் நடவடிக்கையெடுத்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த செய்திகளை மறுத்துள்ள மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், அவ்வாறான எந்த நடவடிக்கையினையும் தான் எடுக்கவில்லையென தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
அதிகாரிகளின் மத்தியில் உள்ள முரண்பாடுகளும் வினைத்திறனற்ற செயற்பாடுகளுமே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற காரணம்.
எந்த சந்தர்ப்பத்திலும் குறித்த உடற்பாகங்களை மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் புதைக்க நான் நடவடிக்கை எடுக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.






