தந்தை தேநீர்க்கடை முதலாளி – நாசா விண்வெளியில் மகள்

மதுரை பகுதியை சேர்ந்த டீக்கடைக்காரரின் மகளான தான்யா தஷ்னம் என்ற சிறுமிக்கு நாசா விண்வெளி ஆய்வுமையத்திற்கு செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

குறித்த சிறுமி மதுரை மகாத்மா மாண்டிசோரி மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு படிக்கின்றார்.

அதே பள்ளியில் இவரது தாயார் ஆசிரியையாக உள்ளார். தான்யா தஷ்னம், அறிவியல் ஆர்வம் காரணமாக இணையதளத்தில் நடத்தப்படும் சர்வதேச விண்வெளி அறிவியல் போட்டியில் பங்கெடுத்துள்ளார்.

இதில் தான்யா தஷ்னம், சாய்புஜிதா (ஆந்திரா), அலிபக் (மகாராஷ்டிரா) ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இதனால், மூவரும் விண்வெளி ஆய்வு மையமான நாசா செல்வதற்கான அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதேவேளை, அடுத்த மாதம் முதல் வாரத்தில் அமெரிக்கா சென்று விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் இவர்கள் ஒருவாரம் தங்கவுள்ளனர். அங்குள்ள ஆய்வகத்தை சுற்றிப்பார்ப்பதுடன், அங்குள்ள விஞ்ஞானிகளுடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும், நாசா செல்லும் வாய்ப்பை பெறும் ஒரே தமிழக மாணவி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like