தலைவிரி கோலத்துடன் தர்காவில் நிர்மலாதேவி… பீதியில் அலறும் அருப்புக்கோட்டை மக்கள்..!

கல்லூரி மாணவிகளை போன் மூலம் தொடர்பு கொண்டு தவறான பாதைக்கு அழைத்த அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலா தேவி (வயது 46) கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

சிறையில் இருந்த நிர்மலா தேவியை ஏப்ரல் 25-ந் தேதி சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 நாள் காவலில் எடுத்து, விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்களை நிர்மலா தேவி நீண்ட நெடிய வாக்குமூலமாக அளித்திருந்தார்.

இந்நிலையில், நிர்மலாதேவி மனநிலை சரியில்லாமல் இருப்பதாகவும் மனநிலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தன் மீது காமாட்சி அம்மன் இறங்கி இருப்பதாக கூறி கண்களை மூடி தியானிப்பது போல் அமர்ந்து தன்னை மாட்டிவிட்ட இளம்பெண்கள் இறந்துவிட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், கால்டாக்ஸியில் அருப்புக்கோட்டை சென்றுள்ளார். அப்போது, வழக்கறிஞர் ஒருவர் உன் கணவர் பேசுகிறார், இதோ அவரிடம் பேசு என தனது மொபைல் போனை கொடுத்துள்ளார்.

அதை வாங்கிய நிர்மலாதேவி, மொபைல்போனை தரையில் போட்டு அடித்து டெம்பர் கிளாஸை உடைத்துள்ளார்.

பின்பு, மொபைல் கடையில் டெம்பர் கிளாஸ் மாற்ற சென்று மொபைல் கடையில் தரையில் அமர்ந்து, கோர்ட்டில் நடந்துகொண்டது போலவே கண்களை மூடி முனக ஆரம்பித்திருக்கிறார்.

அதன்பிறகு, தான் ஓட்டிவந்த டூ வீலரை எடுக்காமல் அங்கேயே விட்டுவிட்டு, தன் இஷ்டத்துக்கு சாலையில் அங்குமிங்குமாக நடந்து தலை நிறைய மல்லிகைப்பூ வைத்துக்கொண்டு, சாலையில் கிடந்த காகிதங்களை அவர் பொறுக்க ஆரபித்துள்ளார். இதனால், மக்கள் அவரை பீதியுடன் பார்த்திருக்கின்றனர்.

மேலும், இரவு 9 மணியளவில், அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தர்காவுக்குச் சென்று, தனக்கு பேய் பிடித்திருப்பதாகக் கூறி, மந்திரிக்க வேண்டும் என்று உறுமியிருக்கிறார். அங்கு தலைவிரி கோலமாகத் தலையைச் சுழற்றியபடியே அவர் முட்டிக்கொண்டிருக்க.. அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுக்க, பெண் காவலர்கள் இருவர் வந்து நிர்மலாதேவியை இழுத்துச் சென்றுள்ளனர்.