நல்லூரானை கைதூக்கி தொழுதகாலம் போய் ஸ்மாட்போனில் வணக்கம் செலுத்தும் காலமிது

வரலாற்று புகழ்மிக்க அலங்காரக் கந்தனாம் நல்லூரான் மகோற்சப திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இனிதே இடம் பெற்றது.

25 நாட்கள் நல்லூரானின் விழாக்கோலத்தினை கண்குளிரக்காண ஈழத்துவாழ் மக்கள் மட்டுமன்றி புலம்பெயர் நாடுகளில் இருந்தும் நம்மக்கள் பெருந்திரளென ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.

நம் தமிழர் பண்பாடுகளிற்கமைய பக்தர்கள் ஆடைகள் அணிந்து ஆலயத்திற்கு வருகை தந்திருந்தமை பெருமகிழ்வினை பலருக்கும் தந்தது.

ஆனால் ஒரே ஒரு குறைதான். அது என்னவெனில், இருகரங்களியும் தலைக்குமேல் தூக்கி அரோகரா கோசங்கள் எழுப்பி அலகாரக் கந்தனாம் நல்லூர்கந்தனை தொழுதகாலம் போய் ஸ்மாட்போனில் தூக்கி வணக்கம் செலுத்தும் காலமாக தற்பொழுது மாறிவிட்டதுதான் சின்ன வருத்தம்.