சஜித் தொடர்பில் யாரும் எதிர் பாராத முடிவுகளை அறிவித்தார் ரணில்?

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சேபனை எதுவும் இதுவரை தெரிவிக்கவில்லை என்று அக்கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மக்கள் கேட்கின்ற ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டும். மக்களின் விருப்பத்திற்கு மாறாக முடிவெடுத்தால் அது ஜனநாயக விழுமியங்களுக்கு எதிராக முடிவாகவே அமையும்.

இன்று ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு கட்சிக்குள் இருக்கும் ஒருசிலர் விரும்புவதில்லை எனவும் அமைச்சர் ஹரின் குறிப்பிட்டார்.