நாய் குரைக்கும் சத்தத்தை கேட்டு வீட்டு கதவை திறந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வவுனியாவில் சம்பவம்

வவுனியா – ஓமந்தை பகுதிக்குள் புகுந்த 5 அடி நீளமான முதலையால் நேற்று இரவு அப்பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வீட்டிலிருந்த நாய் குரைக்கும் சத்தத்தை கேட்டு நபரொருவர் கதவை திறந்து பார்த்த போது வீட்டு முற்றத்தில் 5 அடி நீளமான முதலையொன்று காணப்பட்டுள்ளது.

முதலையை விரட்ட அப்பகுதி மக்கள் முயன்ற போது முதலை வீதியோரத்தில் இருந்த சிறிய பற்றைக்குள் புகுந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் உடனடியாக ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், வவுனியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளை வரவழைத்தனர்.

அவர்கள் இன்று காலை முதலையை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.