இன்று அதிகாலை நிகழ்ந்த கோரம்! ஒருவரின் உயிர் பறிபோனது

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிகுடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலியானதோடு மேலும் ஒருவர் படுகாயமடைந்ததாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கிச் சென்ற லொறியும் கல்முனையில் இருந்து மட்டக்களப்பை நோக்கி வந்துகொண்டிருந்த பட்டா ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் இம்மரணம் சம்பவித்தது.

காவத்தைமுனை, பனிச்சையடி வீதியை அண்டி வசிக்கும் அலியார். நூர்ஜஹான் (வயது 46) எனும் பெயருடைய பட்டா ரக வாகனத்தில் பயணித்தவரே விபத்தில் சிக்கி மரணித்தவராகும். சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் பற்றி களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.