அனுராதபுரத்தில் வசிக்கும் சிங்கள இனத்தவர்களான எம்.ஐ.எம்.ரத்நாயக்கா மற்றும் கஜசானி பூர்னிமா ஆகியோர் இந்து முறைப்படி திருமணம் செய்துள்ளமை பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த தம்பதியினர் வவுனியா, குருமன்காடு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் சிவஸ்ரீ திவாகரக்குருக்கள் தலைமையில் மந்திரங்கள் ஓத , இந்து முறைப்படி தாலி கட்டி திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வை கேள்வியுற்ற வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மணமக்களான .ரத்நாயக்கா மற்றும் கஜசானி பூர்னிமா தம்பதியரை ஆசிர்வதித்தனர்.
பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிங்களவர்கள் இருவர் தமிழர் கலாசாரத்தின் படி வேட்டி, சேலை அணிந்து ஆலய மண்டபத்தில் இந்து முறைப்படி திருமணம் செய்ததை பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.






