தீவிரவாதியின் தலையில் நடந்த அரசியல், ஒரு மாதத்திற்கு முன்னதாகவே மகிந்த, கோத்தா, வியாழேந்திரன், பிள்ளையான், கருணா, மற்றும் ஹிஸ்புல்லாவினால் வடிவமைக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரல்.
இதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்தது, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரான சில அலுவலர்கள்.

மொத்த நிகழ்ச்சிக்கும் தலைமை தாங்கியவர் மகிந்த கைப்பிள்ளை வியாழேந்திரன் அவர் என்ன காரணமும் கூறலாம் காரணம் இவரின் வாய் நல்ல நீள அகலமுடையது அதனால் இவரின் பேச்சை மிஞ்ச வேற பேச்சுக்கள் மிக.. மிக குறைவு
தீவிரவாதியின் உடல் எச்சங்களை காத்தான்குடி பகுதியில் புதைப்பதை ஏற்று கொள்ள கூடாது என்னும் கட்டளையை, முன்கூட்டியே மகிந்த தரப்பு ஹிஸ்புல்லாவுக்கும், ஹிஸ்புல்லா இஸ்லாமிய அமைப்புக்களுக்கும் விடுக்கப்பட்ட ஒன்று.
எச்சங்களை மட்டு பாரதி வீதியில் உள்ள இஸ்லாமிய மையவாடியில் புதைப்பதற்க்கு எடுத்த தீர்மானத்திற்கு மாநகர சபை உறுப்பினர்கள் யாரிடமும் இருந்தும் ஆட்ச்சேபனை தெரிவிக்காமல் இருந்த அதே நேரம், பிள்ளையானின் கட்சியின் மகளீர் அணித் தலைவி செல்வி செல்லத்துரையிடம் இருந்து, யாருக்கோ ஒரு தொடர்பு பறந்தது.
அந்த நபர் வேறு யாருமல்ல பிள்ளையானின் நெருங்கிய அரசியல் நண்பன் ஹிஸ்புல்லா அவரிடம் இருந்து வந்த கட்டளையின் பின்னரே, மாநகர சபை உறுப்பினர் செல்வி செல்லத்துரை, அந்த இஸ்லாமிய மையவாடியில் புதைப்பதை எதிர்த்து கோபாவேசம் கொண்டு வீதியில் இறங்கி போராடுகிறார் இப்படி ஒரு பற்றாளர் இவர்.
அதன் பின்னராக நடந்த காய் நகர்த்தலே, கள்ளியங்காட்டு இந்து சேமக்காலையில் புதைத்ததும், பின்னர் போராட்டம் செய்ததும், வியாழேந்திரன் கம்பெனியின் வேண்டுகோளின் அடிப்படையிலே போலீசார் மென்மையான தடியடி சேவை வழங்கியதும்.
வியாழேந்திரன் எந்த ஒரு கீறலும் இல்லாமல் தப்பியதும் மக்களாகிய நீங்கள் அறிந்தது.
எல்லாமே நடத்தப்பட்ட நாடகம். இவை அனைத்துக்கும் காரணம் யார்? என்பது மக்களாகியஉங்களிற்கு நன்கு தெரிந்திருக்கும்.
இப்படியெல்லாம், போலியான முகம் உள்ளவர்களையே மக்கள் விரும்புகிறார்கள் என்னும் போலி விம்பம் இன்று தமிழர்கள் மத்தியில் உருவாக்கப்பட்டு விட்டது.
தமிழர்களின் போராட்டத்தை காட்டிக் கொடுத்து தமிழ் மக்களை கடத்தி கப்பம் வாங்கி கொலை கொள்ளையில் ஈடுபட்ட ஆயுதக்குழுக்களையும் அதனோடு இணைந்து மக்களை ஏமாற்றுபவர்களையும் மக்கள் விரைவில் அடையாளப்படுத்த வேண்டும்
போலிகள் செய்தால் தான் மக்களிடம் இடம் பிடிக்க முடியும் என்னும் மன நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இது மாறவேண்டுமா? இல்லையா? கிழக்கு மண் கல்வி அறிவும் வீரமும் விளைந்த மண் இதனை கூத்தாடிகள் கூடாராமாக்க யாரும் அனுமதிக்கக் கூடாது.
தமிழர்கள் சுயமாக சிந்திக்க வேண்டிய தருணம் இது.






