பிரதமர் செயலகத்திலிருந்து வந்த அதிரடி உத்தரவால் யாழ்.மாவட்டத்தில் மிக நீண்டகாலம் புனரமைபின்றி காணப்பட்ட யாழ்ப்பாணம்- மனிப்பாய்- காரைநகா் இடையிலான வீதி புனரைப்பு செய்யபப்டுகின்றது.
குறித்த வீதியை உடனடியாக புனரமைக்குமாறு பிரதமா் அலுவலகத்தின் செயலாளா் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு உத்தரவு பிறப்பித்துள்லதாகவும் தெரியவருகின்றது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்க யாழ்.செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி கூட்டத்தின் போது காரைநகர் பிரதேசசபை தவிசாளரினால் யாழ் மானிப்பாய் காரைநகர் வீதி அபிவிருத்தி, காரைநகர் பிரதேச சுற்றுவட்ட வீதி அபிவிருத்தியை வீதி அபிவிருத்தி அதிகார சபையூடாக 2019இல் ஆரம்பித்து மக்களின் இலகுவான போக்குவரத்துக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து பிரதமர் அலுவலகத்தின் செயலாளர் யாழ் மானிப்பாய் காரைநகர் வீதி மற்றும் காரைநகர் பிரதேச சுற்றுவட்ட வீதியை உடன் மீளப்புனரமைப்பதற்கு ஏற்ற ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவருக்கு கடிதம் மூலம் பணிந்துள்ளார்.
அதன்படி மேற்படி கடிதத்தின் பிரதிகள் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், காரைநகர் பிரதேசசபை தவி சாளர் வீ.கேதீஸ்வரதாஸ் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .






