சஜித் பிரேமதாசவுடன் இணைந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையில் கூட்டணி ஒன்றை உருவாக்குவதற்கான விருப்பம் சுதந்திரக் கட்சியிலுள்ள சிலருக்கு உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச இணைந்து புதிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பாக பெரிய பேச்சுவார்த்தைகள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினுள் நடைபெற்றது.
இது குறித்து எனக்கும் சந்தேகம் உள்ளது.
எவ்வாறாயினும் சஜித் பிரேமதாசாவுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இடையில் கூட்டணி ஒன்றை உருவாக்குவதற்கான விருப்பம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சில பிரிவுக்கு உள்ளது.
தயாசிறி ஜயசேகர, வீரகுமார திஸாநாயக்க போன்றோருக்கு அந்த விருப்பம் இருப்பதாக நான் அறிகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.






