அமெரிக்காவின் உயர் பதவியைப் பிடித்த இலங்கைப் பெண்

அமெரிக்காவின் மினசொட்டா மாநிலத்தின் உதவி சட்டமா அதிபராக இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க சட்டத்துறையில் இலங்கையர் ஒருவர் பெரும் பெரிய கௌரவமாக இது குறிப்பிடப்படுகிறது.

கம்பஹா மாவட்டத்தின் மடல்கமுவ, பட்டபெத்தவை சேர்ந்த நிலுஷி ரணவீர என்ற பெண்ணே இந்த கௌரவத்தை பெறுகிறார். இவர் தற்போது மினசொட்டா மாநிலத்தில் வசித்து வருகிறார்.

கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தில் பட்டம்பெற்று 2005 இல் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். 2006 இல் மினசொட்டா பல்கலைக்கழகத்தின் ஹாம்லின் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.

2016 இல் பட்டத்தை பெறும்போது, ஹாம்லின் ஸ்கூல் ஒஃப் லோ என தேர்வாகியிருந்தார்.

மாநில நீதிபதியின் கீழ் குற்றவியல் சட்டத்தைப் பற்றி கற்ற நிலுஷி, தற்போது மினசொட்டா மாநிலத்தின் உதவி சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.