அவுஸ்திரேலியாவில் கொல்லப்பட்ட இலங்கை மாணவி! பொலிஸார் வெளியிட்டுள்ள சிசிடிவி காணொளி

அவுஸ்திரேலியாவில் கொல்லப்பட்ட இலங்கை மாணவி தொடர்பில் விக்டோரியா பொலிஸார் சிசிடிவி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த வாரம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை மாணவி ஒருவர் உயிரிழந்தார்.

Monash பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற இலங்கையை சேர்ந்த 20 வயதான நிசாலி பெரேரா என்ற மாணவியே இந்த விபத்தில் உயிரிழந்திருந்தார்.

கறுப்பு நிறத்திலான வாகனம் ஒன்றே மாணவி மீது மோதிவிட்டு நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் கார் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் இருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் இருந்து மீட்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் தம்பதியினர் தொடர்பான சிசிடிவி காணொளி ஒன்றை அந்நாட்டு பொலிஸார் இன்று வெளியிட்டுள்ளனர்.

37 வயதான Shane Cochrane மற்றும் 33 வயதான Lauren Hindes தொடர்பிலான காணொளி ஒன்றையே அந்நாட்டு பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த இருவரையும் கைது செய்வதற்கான நிறைய ஆதாரங்கள் இருப்பதாகவும், விரைவில் அவர்களை கைது செய்வோம் என அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like