கிளிநொச்சி ATM இல் திருட்டு – விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்

கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் உள்ள ATM வங்கி இயந்திரத்தில் களவாட முற்பட்ட 6 பேர் நேற்றைய தினம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முழங்காவில் நாச்சிக்குடா சந்தியில் இலங்கை வங்கிக்கு சொந்தமான ATM பணப்பரிமாற்ற இயந்திரத்தை உடைத்தே அவர்கள் கொள்ளையிட முற்பட்டுள்ளனர்.

குறித்த இயந்திரப் பகுதிக்குள் நேற்று முன்தினம் இரவு குறித்த 6 பேரும் நீண்ட நேரம் இயந்திரத்தை உடைக்க முற்பட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறுதியில் முயற்சி தோல்வியடைந்து வெளியேறிய போதும், அவர்கள் ATM இயந்திரத்தை உடைக்க முயன்றமை வங்கியில் உள்ள சி.சி.ரிவி இல் பதிவாகியுள்ளது.

குறித்த ஆறுபேரும் உச்சக் கட்ட மதுபோதையின் காரணமாக மேற்படி செயல் இடம்பெற்றிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

இதேவேளை சி.சி.ரிவி உதவியுடன் குறித்த 6 பேரும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் பிரதேச சபை ஒன்றின் ஊழியர் எனவும் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.