செப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்… பிறந்த திகதிப்படி யாருக்கு அதிர்ஷ்டம்?

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

மனதில் வீரமும் செயலில் ஈரமும் உடைய ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். கவனமாக பேசுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். அரசியல்துறையினருக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். மாணவர்களுக்கு கல்விக்காக செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

பரிகாரம்: சிவனுக்கு தீபம் ஏற்றி வணங்கவும். பொருளாதார பிரச்சனைகள் அகலும்.

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

கொண்ட கொள்கையில் மாறாமல் இருக்கும் இரண்டாம் எண் அன்பர்களே நீங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பவர். இந்த மாதம் நீண்ட நாட்களாக இருந்த காரிய தடைகள் நீங்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கும். கலைத்துறையினருக்கு வாக்குவன்மையால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்ககும். தடைபட்ட காரியங்கள் நல்லபடியாக நடக்கும். அரசியல்துறையினருக்கு எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பணம் சம்பாதிக்கும் திறமை அதிகப்படும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள்.

பரிகாரம்: அம்மனுக்கு பஞ்சமுக தீபம் ஏற்றி வணங்கவும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும்.

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

எண்ணம் – செயல் – புத்தி ஆகியவற்றில் நிதானமாகவும் சிரத்தையுடனும் இருக்கும் மூன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் துணிச்சலான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் நன்மைகள் உண்டாகும். மனதில் மகிழ்ச்சியான எண்ணங்கள் தோன்றும். திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த தடை நீங்கி பணவரத்து கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் அடிக்கடி மனக்கவலை ஏற்படும்.

பெண்களுக்கு மனக்குறைகள் நீங்கி மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்தும் கூடும். கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். அரசியல்துறையினருக்கு இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு: கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை தரிசித்து வணங்கி வரவும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

செய்யும் செயலில் வேகத்துடன் விவேகத்தையும் கொண்ட நான்காம் எண் அன்பர்களே இந்த மாதம் முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும்.

தொழில் வியாபாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். வியாபார நிமித்தமாக பயணங்கள் செல்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகனயோகம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கப் பெறுவீர்கள்.

பெண்களுக்கு புத்தி சாதூரியம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள். கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். அரசியல்துறையினர் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

பரிகாரம்: அம்மன் கோயிலுக்கு சென்று வேப்பிலை அர்ப்பணித்து வழிபடவும். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும்.

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

சாமர்த்தியமும் திறமையும் கொண்ட ஐந்தாம் எண் அன்பர்களே இந்த மாதம் திடீர் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். சுபச் செலவு ஏற்படும். முயற்சிகளில் தடை ஏற்பட்டாலும் அனைத்தையும் தகர்ப்பீர்கள்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிரத்தையாக பணிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும். எதிலும் சந்தோஷம் நிம்மதி வரும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.

பெண்களுக்கு எந்த முயற்சியிலும் சாதகமான பலன் கிடைப்பதில் இருந்து வந்த சுணக்க நிலை நீங்கும். கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். அரசியல்துறையினர் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய கவலை நீங்கும். தடையை தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள்.

பரிகாரம்: பெருமாளுக்கு துளஸியால் அர்ச்சனை செய்யவும். மனதிலிருக்கும் குறைகள் நீங்கும்.

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

தனது வசீகரமான தோற்றத்தாலும் வசியம் கொண்ட பேச்சாலும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வித்தை தெரிந்த ஆறாம் எண் அன்பர்களே இந்த மாதம் வீண் வாக்குவாதங்கள் அகலும். எந்த காரியத்திலும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்.

தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான பலன் கிடைக்கப்பெறுவார்கள். குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.

பெண்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரியங்களை செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும். கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். அரசியல்துறையினர் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்கவும். திட்டமிட்ட காரியங்கள் தொய்வின்றி நடக்கும்.

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் நேர்மையையே கடைபிடிக்கும் ஏழாம் எண் அன்பர்களே இந்த மாதம் மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும்.

தொழிலில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் இருந்த தடுமாற்றம் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிணக்குகள் நீங்கும்.

பெண்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகாரிக்கும். கலைத்துறையினர் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. சக கலைஞர்களிடம் அனுசரித்து போவது நன்மைதரும். அரசியல்வாதிகள் வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். மாணவர்களுக்கு கவன தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது.

பரிகாரம்: விநாயகர் அகவல் சொல்லி விநாயகரை வணங்கி வரவும். சுணங்கிக் கிடந்த காரியங்கள் மீண்டும் வேகம் பெறும்.

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உழைப்பிற்கும் நேரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் எட்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் வீண் வாக்குவாதங்கள் உண்டாகலாம். மனதில் உற்சாகம் ஏற்படும். வீண் பகை உண்டாகலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் அகலும். பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண் அலைச்சல், கூடுதல் உழைப்பும் இருக்கும். குடும்பத்தில் ஏதாவது சில்லறை சண்டைகள் ஏற்படலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

பெண்களுக்கு சமையல் செய்யும்போது கவனம் தேவை. எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. கலைத்துறையினருக்கு வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. அரசியல்துறையினர் மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். மாணவர்களுக்கு இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை.

பரிகாரம்: அம்மனுக்கு அரளிப்பூ சாற்றி வணங்கவும். மனதில் அமைதி ஏற்படும்.

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

கொடுத்த வேலையை சரியான நேரத்தில் திட்டமிட்டு செய்யும் வித்தை அறிந்த ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் தன்னம்பிக்கை வளரும். பணவரவு திருப்தி தரும். வாக்குவன்மை அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள்.

தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இதுவரை இருந்த தொய்வு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கலாம். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும்.

பெண்கள் திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். அரசியல்துறையினருக்கு மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும். அடுத்தவர்கள் கடமைக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

பரிகாரம்: மஞ்சள் சாமந்திபூவை முருகனுக்கு அர்ப்பணித்து வழிபட்டு வரவும். சோதனைகளை தகர்த்து சாதனைகளை புரிய முடியும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like