மஹிந்தவை தீர்த்துக் கட்டிய சந்திரிக்கா – மைத்திரி! குழப்பத்தில் தென்னிலங்கை

அதிர்ச்சியில் மகிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டா காரணம் கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகாநாட்டில் மகிந்த மிக முக்கிய பங்கு வழங்கப் பட்டது.

ஆனால் இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68ஆவது சம்மேளனம் கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நேற்று இடம்பெற்றுவருகின்றது.

இதில் மகிந்தவின் நெருங்கிய சகாக்களான வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்தன, உதய கம்மன்பில, திஸ்ஸ விதாரண, டி.யூ. குணசேகர, ஏ.எல்.எம். அதாவுல்லா உள்ளிட்ட மஹிந்த அணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இன்றைய மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

இதனால் மகிந்த மிகுந்த வேதனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் குறித்த விடயம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், அதுகுறித்த முக்கிய அறிவித்தல் இன்றைய தினம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.