கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்றில் மோதுண்டதில் இளைஞர் ஒருவர் பலியானார்.
ஹிக்கடுவையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து ஒன்றில் மோதி அவர் இன்று முற்பகல் பலியானார்.

தொழில் நிமித்தமாக கொழும்பு நோக்கி வந்த அவர் கைப்பேசியை பயன்படுத்தியபடியே தொடருந்து பாதையில் பயணித்த வேளையில் குறித்த தொடருந்தில் மோதுண்டதாக காவற்துறையினர் குறிப்பிட்டனர்.
பலியானவர் நிட்டம்புவை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதிக்குள் தொடருந்துடன் மோதுண்டு 330 பேர் பலியாதாக தொடருந்து பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.






