பிலியந்தவலிலுள்ள வீட்டில் இருந்து தங்கம் திருடப்பட்ட வழக்கின் சந்தேக நபரை கைது செய்ய, பொதுமக்களின் உதவியை பொலிசார் நாடியுள்ளனர்.
கடந்த ஜூன் 21 ஆம் திகதி சந்தேக நபர் தங்கத்தை திருடிக் கொண்டு தப்பிச் சென்றதாக பதிவு செய்யப்பட்ட முறைப்பாடின் அடிப்படையில், பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

சந்தேக நபர் ஸ்ட்ரானிஸ்வட்ட எஸ்டேட், ஓம்பல் பிரிவு என்ற முகவரியில் வசிப்பவர்.
அவர் தொடர்பான எந்த தகவலையும் பின்வரும் எண்களில் தெரிவிக்குமாறு பொலிசார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
OIC – 071 – 8591665
OIC Crimes Division – 078 – 4600219






