குருணாகலில் உறங்கிக் கொண்டிருந்த தனது கணவனின் கழுத்தை வெட்டிக் கொலை செய்துவிட்டு, மனைவி ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ள சம்பவம் பெரு அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய உயிரிழந்தவரின் மனைவியான 38 வயதான சனத் குமாரி என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் இரத்த வெள்ளத்தில் கிடந்த கணவனின் சடலத்தை மீட்டுள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர், போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட கடும் மோதலை அடுத்து கணவன் உறங்கிக் கொண்டிருந்தவேளை கணவனை மனைவி கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தான் கொலை செய்து விட்டதாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 10 வருடங்கள் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்ந்தவர்களுக்கு பிள்ளைகள் இல்லை எனக் கூறப்படுகின்ற நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






