திருக்கோவில் – அக்கரைப்பற்று பிரதான வீதி, தம்பட்டை பிரதேசத்தில், ஆட்டோ ஒன்று வீதியை விட்டுவிலகி, மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவனொருவன் பரிதாபமாக பலியாகியுள்ளான்.
குறித்த சம்பவம், நேற்று காலை இடம்பெற்றதாக, திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் தம்பிலுவில் முதலாம் பிரிவு ஜே.பி. வீதியைச் சேர்ந்த 08 வயதுடைய சசிக்குமார் ஷிவசஞ்சீவன் என்ற சிறுவனே, இதில் உயிரிழந்துள்ளான்.
திருமண வீடு ஒன்றுக்குச் சென்று திரும்புகையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆட்டோவை சிறுவனின் மாமா ஓட்டிச் சென்றதாகவும், அதில் சிறுவனின் தாயார், மற்றும் அம்மம்மா ஆகியோரும் பயணித்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவனின் சடலம் இன்று தம்பிலுவில் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது .
இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.






