யாழில் இரும்பு விற்பனை நிலையத்தின் உரிமையாளர் மீது வாள்வெட்டு

யாழ்.கோண்டாவில்- உப்புமடம் பகுதியில் உள்ள இரும்பு விற்பனை நிலையத்தின் உரிமையாளர் மீது வாள்வெட்டு குழு ஒன்று தாக்குதல் நடாத்தியுள்ளது.

இன்று மாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இரும்பு விற்பனை நிலையத்திற்குள் நுழைந்த வாள்வெட்டு குழு தாக்குதல் அங்கிருந்த உரிமையாளர் மீது தாக்குதலை நடாத்திவிட்டு தப்பி சென்றுள்ளது.

படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதேவேளை வாள்வெட்டு தாக்குதலை நடாத்திய ரவுடி கும்பல் தப்பித்து செல்லும் காட்சிகள் அங்கிருந்த சீ.சீ.ரி.வி மூலம் பொலிஸாருக்கு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.