வியாழேந்திரனின் அரசியல் வெறியால் பறிபோன ஆறு பிள்ளைகளின் தந்தை உயிர்! வெளியன உண்மை

கடந்த மாதம் 27ஆந் திகதி சியோன் தேவாலய தற்கொலைதாரியின் உடற்பாகங்களை மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைத்தமைக்காக கல்லடிப் பாலத்தில் போக்குவரத்தை முடக்கிச் செய்யப்ப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக, ஆறு பிள்ளைகளின் தந்தை ஒருவர் அநியாயமாக இறந்து போனமை தொடர்பில் தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன.

மகிந்த தரப்பிடம் கோடிகளை வாங்கிக்கொண்டு கட்சி மாறியதால் அழிந்து போன செல்வாக்கை சரி செய்ய ஆர்ப்பாட்ட அரசியல் செய்து, தனது ஈனச்செயலை மக்களின் மனதில் இருந்து மறக்க வைக்க பறந்தது திரியும் மட்டக்களப்பு கருப்புச்சட்டை அரசியல்வாதியின் செயற்பாட்டாலேயே இந்த மரணம் சம்பவித்ததாக கூறப்படுகிறது.

பட்டிப்பளை பிரதேசத்தின் கடுக்கமுனை கிராமத்தை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு திராய்மடு எனும் இடத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அழகிப்போடி நேசராசா தனது வாழ்வாதாரத்துக்காக முச்சக்கர வண்டி ஓட்டி வருபவர்.

27.08.2019 ஆந் திகதி தனது உறவினர்களான பெண்கள் இருவரை கடுக்கமுனையிலிருந்து தனது முச்சக்கரவண்டியில் ஏற்றிக் கொண்டு மட்டக்களப்பு திராய்மடு கிராமத்தை நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கிறார்.

கல்லடிப்பாலத்தை அண்மித்ததும் தான் இவர்களுக்கு தெரிகிறது, பாலத்தின் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டு,வாகனங்களும் மக்களும் நெருக்கியடித்துக் கொண்டு முன்னும் போக முடியாமல் பின்னும் நகர முடியாமல் அவதிப்பட்டுக்கொண்டிருப்பது.

சன நெரிசலுக்குள் மாட்டிக்கொண்ட முச்சக்கரவண்டியை மீண்டும் கல்லடியை நோக்கி கொண்டு செல்ல நேசராசா முயற்சிக்கையில், அதன் ‘ஸ்டார்ட்’ நின்று விடுகிறது.

தன்னியக்க முறையும் கை கொடுக்காமையினால் பதறிப்போன நேசராசா, பெண்கள் இருவரையும் பத்திரமாக கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பதட்டத்தில், இழுவை மூலம் இயந்திரத்தை உயிப்பிக்க பலமுறை முயற்சி செய்கிறார்.

இருதய நோயாளியான நேசராசா இழுவை மூலம் சோர்ந்து போனதோடு ஒருவழியாக முச்சக்கர வண்டியை ‘ஸ்டார்ட்’ செய்து மிகவும் சோர்ந்து போன நிலையில் கல்லடியில் உள்ள தமது உறவுக்கரரின் வீடு வரை செல்கிறார். அங்கு சென்றதும் தனக்கு குடிக்க தண்ணீர் கேட்கிறார். தண்ணீர் கொடுத்த போதிலும் அதனை குடிக்காமலேயே அவ்விடத்தில் மயங்கி விழுகிறார்.

துடித்துப் போன உறவினர்கள் ,உடனடியாக அம்பியூலன்சை அழைத்து, நேசராசாவை ஏற்றிக்கொண்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விரைந்தனர். ஆனால் வியாழேந்திரனாலும் அவரது கருப்புச்சட்டை காவாலிகாளாலும் TMVP செல்வியினாலும் உணர்ச்சியூட்டப்பட்ட மக்கள் கூட்டம் கல்லடிப் பாலத்தின் ஊடான போக்குவரத்தை மறித்து ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தது.

நோயாளியின் நிலையை சொல்லி அம்பியூலன்சுக்கு வழிவிடுமாறு கெஞ்சியும் வியாழனின் கருப்புச்சட்டை நாடகக் குழு வழி விடவில்லை. பொலிசாரின் தடியடிக்குப் பின்னரே அம்பியூலன்சுக்கு வழி கிடைத்தது. ஆனால் பாவம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே நேசராசா இறந்துவிட்டார்.

மனிதாபிமானமற்ற இந்த சாவுக்கு யார் காரணம்?. இதற்கு தண்டனை வழங்கப்பட வேண்டியவர்கள் யாவர்?

தற்கொலைதாரியின் உடற்பாகங்களை அன்று புதைக்கப் போகிறார்கள் என்று தனக்கு ஏற்கனவே தெரியும் என்றும், அதை எங்கே புதைகிறார்கள் என்று தாம் அவதானித்துக் கொண்டு இருந்ததாகவும் வியழேந்திரன் தனது வாயாலேயே தொலைக்காட்சி நிகழ்வொன்றில் தெரிவித்திருந்தார்.

இதனால் அவர் அன்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. புதைக்கப் போகிறார்கள் என்று தெரிந்த இவர் உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு முன்னரே இதனை தடுத்திருக்கலாம்.

அன்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்துக்கு போய் இவ்விடயம் தொடர்பாக அறிவித்து தடுத்திருக்கலாம். அல்லது புதைத்த பின் சட்டப்படியாக நீதிமன்று மூலம் நடவடிக்கை எடுத்து இருக்கலாம்.

ஆனால் உடற்பாகங்கள் புதைத்த பின் ஒரு அரசியல் நாடகம் செய்ய வேண்டிய தேவை இவருக்கும் இவரது கருப்புச்சட்டை நாடக குழுவுக்கும் இருந்தது.

கல்லடிப்பாலம் என்பது மட்டக்களப்பு வாவியின் இரு புறங்களையும் இணைக்கும் பிரதான பகுதி. இதை போக்குவரத்துக்கு தடை செய்வதால் பல தரப்பட்டோர் இன்னல்களுக்கு உள்ளாவர்.

அவசர தேவையுடைய மக்கள், நீண்ட தூரம் பயணம் செய்வோர், வெளிநாட்டு பயணங்களுக்காக விரைவோர், வைத்தியசாலைக்கு விரையும் நோயாளிகள், நோயாளிகளை ஏற்றிச் செல்லும் அம்பியூலன்ஸ் வண்டிகள், கடமைக்கு செல்லும் வைத்தியர்கள், தாதியர்கள், பாடசாலை செல்லும் மாணவர்கள் என எண்ணிலடங்காத மக்கள் சிரமமடைவார்கள் என்பதை யாவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

கள்ளியங்காடு மயானத்துக்கருகில் கூடிய மக்களின் உணர்வுகளை தூண்டி, சத்தமாக கத்திக்கொண்டு , அவர்களை வியாழன் குழுவும் TMVP குழுவும் கல்லடி பாலத்துக்கு கூட்டிச்சென்ற நோக்கம் என்ன? கல்லடிப் பாலத்தை முடக்கி மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி தாங்கள் பம்மாத்து அரசியல் செய்வது தானே இவர்களது நோக்கம்.

மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு உரியவாறு தீர்வு பெற்று தருவதற்கு தானே, இவர்களுக்கு மக்கள் வாக்களித்தார்கள். தங்களது அரசியல் விளம்பரத்துக்கு கூத்தாடும் வியாழன் செல்விக்கு மக்கள் என்ன தண்டனை கொடுக்கப் போகிறார்கள் ? நீதிமன்றம் என்ன தண்டனை வழங்கப் போகிறது. நேசராசாவின் சாவுக்கு காரணமானவர்களுக்கு என்ன தண்டனை?

இச்செய்தி வெளியீட்டின் பின் வியாழன் குழு நேசராசாவின் வீட்டுக்கு சென்று மிரட்டலாம். பணத்தை வழங்கி அவர்களது வாயை மூட முயற்சி செய்யலாம். இனிமேலும் இவ்வாறு நடக்காமல் இருக்க நேசராசாவின் குடும்பத்தார் போலீசாருக்கும் நீதிமன்றுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொலிசார் உறவினர்களின் வாக்குமூலம், வைத்தியசாலை அறிக்கை, அம்புயுலன்ஸ் ஊழியர்களின் வாக்குமூலங்களை பெற்று இந்த அநியாய சாவுக்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும்.