இலங்கையில் தமிழர்களின் பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த முஸ்லிம் நபர் தலைமறைவு!

இலங்கையை சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவர் இண்டு கோடி ருபாய் அளவில் பணமோசடி செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

இலங்கையில் அக்குரணை என்னும் இடத்தில் பிறந்த பாரூக் மொஹமட் என்பவரது மகன் சார்பாஸ் மொஹமட் என்பவரே இவ்வாறு பணமோசடி செய்தவராவார்.

இவர் இந்தோனேசியா பாதாம் தீவில் உள்ள உணவகம் ஒன்றை எடுத்து நடத்துவதற்கு உள்கட்டமைப்பு வசதிகளை செய்துகொண்டு அதை உத்தரவாதம் காட்டி பலரிடமும் பணம் பெற்று ஏமாற்றியுள்ளார்.

அவர் பணம்பெற்ற வழிகள் சில.

  • ஏற்றுமதி தொழிலுக்கு பணம் சுழற்சி அடிப்படையில் தேவை என்று பணம் பெற்றுள்ளார்
  • பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை வாங்கித்தருவதாக சொல்லி தொழில் அனுமதி பத்திரம் மற்றும் காப்பீடுகளை போலியாக தயாரித்து வழங்கி குறிப்பிட்ட தினத்தில் வேலையில் சேர அழைப்பதாக சொல்லி பணம் பெற்றுள்ளார்.
  • சிங்கப்பூர் கல்லூரி ஒன்றில் கல்வி கற்க இடம் வாங்கி தருவதாக சொல்லி பணம் பெற்றுள்ளார்
  • கடை திறப்பதற்கு பணம் தேவை என சொல்லி கடவுசீட்டிடை அடகு வைத்து பணம் பெற்றுள்ளார்
  • கடைக்கு வேலைக்கு அமர்த்த தேர்ந்தெடுத்தவர்களிடமும் சிறு அளவில் பணம் பெற்றுள்ளார்

இப்படி பணம் கொ.டுத்து ஏமாந்தவர்களில் இலங்கை பிரஜைகள் , இந்திய பிரஜைகள் , இந்தோனேசியா பிரஜைகள் மற்றும் கனடா பிரஜை ஒருவரும் அடங்குவார்கள். இவ்வாறு பணம் பெற்றபின் உணவகத்தை திறந்து ஒருநாள் மட்டும் நடத்திவிட்டு திரட்டிய பணத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்.

பின் மூன்று நாட்கள் கழித்து அவர் வாடகைக்கு எடுத்து பயன்படுத்திய மகிழுந்தை துறைமுகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இருந்து கைப்பற்றினர்.

இது சம்மந்தமாக இந்தோனேசிய காவல்நிலையத்தில் பாதிக்கப்படடவர்கள் இணைந்து முறைப்பாடு செய்ததால் காவல்துறையும் இணைந்து இவரை தேடி வருகிறது.

இவர் கடவுசீட்டை அடகுவைத்து பணம்பெற்றதால் எவ்வாறு நாட்டை விட்டு வெளியேறினார் என்பதை ஆராய்ந்து பன்னாட்டு காவல்துறையின் உதவியை நாடுவதாக இந்தோனேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.

இவர் தனது தந்தை கொண்டுவந்து தருவதாக சொல்லியும் பணம் வாங்கியதால் இவரின் தந்தைக்கும் ஏதும் தொடர்பிருக்குமோ என்ற கோணத்தில் காவல்துறை அணுகுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது போன்று இவரிடம் வேறுயாரும் ஏமாறக்கூடாது என்பதற்காக ஏமாற்றியவரின் புகைப்பட விபரங்களை இணைத்துள்ளோம்.