காரைதீவில் இடம்பெற்ற பதைபதைக்கும் சம்பவம்! குளிக்க சென்ற மாணவி உடல் கருகிய அவலம்

காரைதீவில் மரணமடைந்த செல்வி நடேஸ்வராசா அக்சயாவின் மரணம் ,குடும்பங்களுக்கு ஒரு எச்சரிக்கையை விட்டுச் சென்றுள்ளது,

அக்சயாவின் தாய் மடுவத்தை ஆஸ்பத்திரியில் தாதி. அன்று இரவு நேர வேலை அவருக்கு.

உறங்கிக்கொண்டிருந்த அக்சயா , காலை 5மணிக்கு ரியூசன் என்பதால் 4மணிக்கு குளிக்கப் போகிறாள்.

புதிய வீட்டுக்குள் அப்பாவும்,அண்ணாவும்,அம்மம்மாவும் நித்திரை என்பதால் அவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்காமல் பழைய வீட்டுக்குள் இருந்த பாத்றூமில் குளிக்க ஆயத்தமாகிறாள்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இதன்போது ,குளித்துக்கொண்டிருந்த அறையில் வெளிச்சம் போதவில்லை என்பதால் ஈரக் கையுடனும் நனைந்த உடலுடனும் போய் சுவிட்ச்சை போட்டபோது இரவு முழுவதும் மின்கசிவில் இருந்த ப்ளக் வெடித்துப் பறந்து மின்சாரம் பிள்ளையை தூக்கி எறிகிறது.

வயர் முழுவதும் எரிந்து மேலே செல்கிறது அங்கே குப்பையும் கூழமுமாக கிடந்த பொலித்தீன் பைகள்,வயர்கள் எல்லாவற்றிலும் நெருப்புப் பிடித்து உருகி உருகி மயக்க நிலையில் கிடந்த அக்சயாவின் மீது ஒழுகி அவளை முழுவதுமாக பொசுக்கி விடுகிறது,

அரை மணிநேரத்துக்கும் மேலாக வெளியே வராத தங்கையைப் தேடிய அண்ணன் அவளை பார்க்க போகிறான். அங்க அவன் கண்ட கோலம் தங்கையின் பொசுங்கிய உடல்…

இந்த நிலையில் நாம் எல்லோரும் சிந்திக்க வேண்டும். சிறிய தவறுகள் மீளவே முடியாத துயரத்தில் நம்மைக் கொண்டு நிறுத்திவிடும்.

இப்படியான சம்பவங்கள் இடம்பெறுவது பெற்றோர்களுக்கு மட்டுமல்ல இந்த செய்தியை படிக்கும் நமக்கும் , இதயம் வலிக்கிறது.

இனிமேலாவது இதுபோன்ற மரணங்கள் நடைபெறாமல் இருக்க ஆகவேண்டியதை செய்வோம்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like