கோட்டாபயவின் கூட்டத்தில் விடுதலைப்புலிகளை விமர்சித்த முரளிதரன்: எழும் கடும் கண்டனங்கள்!

கிரிக்கெட் வீரர்களும் ஏனைய துறைசார் வல்லுனர்களும் நாட்டிற்கு தலைமை தாங்க முடியாது, அனுபவமிக்க அரசியல்வாதி ஒருவரே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் கொழும்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கையில் சிலர் வர்த்தகர்கள் மீதும் ஏனையவர்கள் மீதும் நம்பிக்கை வைக்கின்றனர். ஆனால் மக்களின் பிரச்சினைகளை அரசியல் அனுபவம் உள்ள அரசியல் ரீதியில் முடிவெடுக்க கூடிய ஒருவராலேயே தீர்க்க முடியும்.

சமாதான பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப் புலிகளுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர்கள் அப்பாவிகளை கொலை செய்தனர் எனவும் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

2009இல் யுத்தம் முடிவிற்கு வந்த பின் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் எனவும் தெரிவித்துள்ளார்.

1977 இல் ஆட்சி மாற்றத்தின் பின்னர் எங்கள் வீடுகள் அழிக்கப்பட்டது, அனைத்தும் அழிக்கப்பட்டன, எனது தந்தை தாக்கப்பட்டார், இதனால் அனைவரும் இந்தியாவிற்கு சென்றனர் ஆனால் நாங்கள் செல்லவில்லை நாங்கள் இங்கு வாழ விரும்பினோம் நான் இலங்கையன்.

இரு தரப்பும் தவறிழைத்தன, ஒரு கட்டத்தில் அரசாங்கம் தவறிழைத்தது பின்னர் விடுதலைப்புலிகள் தவறிழைத்தனர். அவர்கள் வாய்ப்புகளை தவறவிட்டனர். தமிழர்கள் அச்சத்துடனேயே வாழ்ந்தனர்.

மக்களுற்கு யார் பாதுகாப்பு வழங்குவார் என்பதே இந்த தேர்தலில் முக்கியம், அவ்வாறான தலைவருக்கே நான் வாக்களிப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் முத்தையா முரளிதரனின் விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பான குறித்த கருத்துக்கு உலகம் முழுவதும் பரந்துவாழும் தமிழர்கள் கடும் கண்டனங்களை சமூக வலைத்தளங்களுடாக வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like