யாழில் வேலியை பிடுங்கி எறிந்த மேயர் ஆர்னோல்ட்!

யாழ் பிரதேச செயலகத்திற்குற்பட்ட மடம் கிழக்கு வீதி ஒழுங்கை ஒன்றினை அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த வீதி அமைப்பதற்கு அவ் வீதியில் இருக்கும் குடியிருப்பாளர் ஒருவர் தொடர்ச்சியாக தடையாக ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.

இந் நிலையில் மாநகர முதல்வா் ஆர்னோல்ட் இதில் நேரடியாக தலையிட்டு பிரச்சினையை உடனடியாக தீா்த்துவைத்துள்ளாா்.

குறித்த நபா் ஒழுங்கையை ஆக்கிரமித்து வேலி அமைத்திருந்ததுடன், ஒழுங்கையை புனரமைக்க இடமளிக்காமல் தொடா்ச்சியாக தடைவிதித்துக் கொண்டிருந்தாா்.

அவரின் அடாவடித்தனமான செயற்பாடுகளை முதல்வர் நேரடியாக சென்று பார்வையிட்டு தீர்த்து வைத்து குறித்த வீதியை புதிதாக தாரிடுவதற்கு தேவையான விடயங்களை மேற்கொள்ள நேரடி கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது குறித்த நபரால் காண்பிக்கப்படாமையினால் உரிய சட்ட நியமங்களுக்கு அமைவாக மாநகர (JCB) மூலம் வேலிகள் தகர்க்கப்பட்டு குறித்த பகுதி மக்களின் பாவனைக்கான வீதி அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிலையில் சட்டத்திற்கு முரணாக வீதியை அமைப்பதற்கு தடையாக இருந்த நபரின் நடவடிக்கையை உரிய முறைப்படி ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொண்டு தமது வீதியை அமைக்க ஆவண செய்தமைக்காக முதல்வருக்கு அப்பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

மேயர் ஆர்னோல்டின் இந்த விஜயத்தில் யாழ் பிரதேச செயலர், அப் பகுதி மாநகரசபை உறுப்பினர், அப்பகுதி கிராம சேவையாளர், , மாநகர பொறியியலாளர்கள், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், யாழ் மாநகர அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள் உள்ளிட்டோரும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.