முரளியின் பந்து வீச்சு- அவுட்டான கோத்தா! சிக்சர் அடித்த பாலித பெரும!

வழக்கமாக முன்னாள் கிரிகெட் வீரர் முரளி வீசும் பந்தில் எதிரணி வீரர்தான் அவுட்டாகுவார். ஆனால் இப்போது முரளி வீசிய அரசியல் பந்தில் கோத்தாவையே அவர் அவுட்டாக்கியுள்ளார்.

இந்நிலையில் தமிழர்களைப்பற்றியும் , விடுதலைப்புலிகளைப்பற்றியும் முரளி பேசிய பேச்சு கோத்தபாய ராஜபக்சவுக்கு விழக்கூடிய தமிழர் வாக்குகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டதாக அரசியல் அவர்தானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இத காரணமாகவே தான் பேசிய பேச்சையே 24 மணி நேரத்திற்குள் அதனை மறுக்க வேண்டிய நிலை முரளிக்கு ஏற்பட்டது.

தான் பேசிய பேச்சுக்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டபடியால் இனி அதைப் பற்றி பேசுவது முறையல்ல. ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது என்னவெனில் அமைச்சர் பாலித்த பெரும அடித்திருக்கும் சிக்சர்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

பாலித பெரும ஒரு சிங்களவர் என்பதோடு அவர் ஒரு அமைச்சரும்கூட. அதோடு அவர் தமிழர் வாக்குகளால் எம் பி யாகவில்லை. இருந்தும் ஒரு தமிழரின் உடலை சுமந்து சென்று மயானத்தில் அடக்கம் செய்து தமிழர் மனங்களில் அமைச்சர் பாலித்த பெரும சிக்சர் அடித்துவிட்டார்.

முத்தையா முரளிதரன் ஒரு தமிழர். அதுவும் மலையக தமிழர். அவர் தன் இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு அடக்கம் செய்ய நிலம்கூட சொந்தமாக இல்லை என்ற அவலத்தையாவது கோத்தபாயாவுக்கு தெரிவித்திருக்கலாம். அதை அவர் செய்யவில்லை.

இனியாவது முரளி கிரிக்கட்டில் பந்து வீசுவது வேறு அரசியலில் பந்து வீசுவது வேறு என்பதை இநன்கு உணர்ந்திருப்பார் என அரசியல் அவதானிகள் கூறிவருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like