கவினுக்கு எதிராக கமெண்ட் போடுங்க.. பணம் கொடுத்த சாக்‌ஷி.. இணையத்தில் வைரலாகும் ஆதார புகைப்படம்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே சாக்க்ஷி பல பிரச்சினைகளுக்கு ஆரம்ப புள்ளியாக இருந்து வந்தார். அதன் பின்னர் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்த வரை இவர் போட்டியாளர்கள் பற்றி அதிகமாக புறணி பேசி வந்தார் இதனால் பிக்பாஸ் ரசிகர்களால் மிகவும் வெறுக்கப்ட்டு வந்தார்.

ஆரம்பத்தில் கவினுடன் நெருக்கம் காட்டி வந்த சாக்க்ஷி அதன்பின்னர் அவர் லொஸ்லியாவிடம் நெருக்கம் காண்பித்ததால் கொஞ்சம் கவின் மீது கோபம் கொண்டார்.

இதனால் லொஸ்லியா மீதும் கவின் மீதும் கடும் கோபத்தில் இருந்து வந்தார் சாக்க்ஷி. அதே போல சாக்க்ஷி பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட போது கவினிடம் ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை. இறுதியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போது கவினடம் பேசிய சாக்க்ஷி, உன்னிடம் வைத்திருந்த விஷம் கலந்த உறவை நான் முறித்து கொண்டதை எண்ணி சந்தோசபடுகிறேன் என்று கூறிவிட்டு தான் வந்தார்.

இந்நிலையில் கவினை கலாய்த்து பிரபல இனையதளம் ஒன்று பல்வேறு மீம்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வந்துள்ளது. அந்த முகநூல் பக்கத்திற்கு மெசேஜ் செய்துள்ள சாக்க்ஷி கவினுக்கு பக்கத்திற்கு கமெண்ட் செய்யுங்க என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், சாக்க்ஷி ஆர்மியும் கவினுக்கு எதிராக சதி செய்துள்ளதாகவும் இதற்கு சாக்க்ஷியும் பணம் கொடுத்து கவினுக்கு எதிராக மீம்களை செய்யுமாறு சொன்னதாகவும் கவின் ஆர்மி குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், சில ஆதாரங்களையும் இணையத்தில் வெளியுட்டுள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like