சுவிட்சர்லாந்தில் கிறிஸ்தவ தமிழ் போதகர் மீது பாலியல் குற்றச்சாட்டு! வெளிவரும் பல இரகசியங்கள்

சுவிஸர்லாந்தின் தேசிய தொலைக்காட்சியான SRF தமிழ் கிறிஸ்தவ சபை ஒன்றின் போதகர் மீது கடுமையாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

குறித்த போதகர் தன்மை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக Rundschau பிரதேசத்தைச் சேர்ந்த சில இளம் பெண்கள் தெரிவித்துள்ளனர். இந்த நபரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

பிசாசு அமர்ந்திருப்பதாக கூறி, ஒரு யுவதியிடம் மற்றுமொரு யுவதி பாலியல் உறுப்பை தொடுமாறு இந்த நபர் கூறியதாகவும் இதன் பின்னர் தனது கைமீது தனது கையை வைத்து ஜெபம் செய்தாகவும் யுவதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள 13 வயதான சிறுமி ஒருவர், தாம் நீண்ட தூரம் சென்று விட்டதாகவும் உடல் ரீதியான தொடர்புகளை கொண்டிருந்தாகவும் கூறியுள்ளார்.

குமார் வில்லியம்ஸ் என்ற இந்த போதகர், பேர்ன் – பெத்லஹேம் பகுதியில் உள்ள தனது வீட்டில் கீழ் மாடியில் தனது போதனைகளை நடத்தி வருகிறார். போதகர் தன்னுடன் உடல் ரீதியான தொடர்புகளை கொண்டிருந்ததாகவும் 18 வயது பூர்த்தியாகவில்லை என்ற போதிலும் அதனை பொருட்படுத்தாது போதகர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார். இது காதலின் உச்சம் என்பதால், அது தவறில்லை என போதகர் கூறியதாகவும் யுவதி தெரிவித்துள்ளார்.

13 வயதான சிறுமி, குடும்ப காரணத்திற்காக அவர் ஒரு நாள் போதகருடன் இரவு தங்க நேரிட்டுள்ளது. சிறுமிக்கு கெட்ட கனவுகள் தென்படுவதால், இந்த நபர் சிறுமியை தனது கட்டிலில் உறங்க வைத்துள்ளதுடன் பாலியல் ரீதியாக நடந்துக்கொண்டுள்ளார். குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு நடக்க கூடிய ஒன்று பற்றி போதகர் சிறுமியை அச்சுறுத்தியுள்ளார்.

எனினும் இந்த குற்றச்சாட்டுக்களை அனைத்தையும் போதகர் குமார் வில்லியம்ஸ் மறுத்துள்ளார். “ என் மீது குற்றம் சுமத்துவோரை என்னிடம் அழைத்து வாருங்கள், நான் ஜெபம் செய்து அவர்களை விரட்டி விடுவேன்” எனக் கூறியுள்ளார்.

சபையின் முன்னாள் உறுப்பினர்கள் தனக்கு எதிராக சதி செய்வதாகவும் பெண்கள் பிசாசின் அடிமையாகி விட்டதாகவும் போதகர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானவை. அவை பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் அப்பால் சென்றவை. இந்த போதகர் தனது சபைக்கும் வரும் உறுப்பினர்களை சூரையாடியுள்ளார். அத்துடன் 5 ஐரோப்பிய நாடுகளில் 25 உப சபைகளை நடத்தி வருகிறார். சபை உறுப்பினர்கள் தசம பாகத்தை அவருக்கு கொடுக்க வேண்டும். சபையின் உறுப்பினர்கள் அனைவரும் தமது வருமானத்தில் 10 வீதத்தை சபைக்கு செலுத்த வேண்டும்.

ஜேர்மனியின் நகரங்களில் உள்ள சபைகளின் உள்ள ஆவணங்களின்படி வருடத்திற்கு 70 ஆயிரம் யூரோக்களுக்கு மேல் சேகரிக்கப்படுவதாக சுவிஸ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அந்த பணத்தில் வாடகை மற்றும் ஏனைய செலவுகள் மேற்கொள்ளப்படுவதுடன் மீதமுள்ளதை போதகர் பயன்படுத்திக்கொள்வார். இந்த போதகர் ஜேர்மனி மற்றும் வெளிநாடுகளில் உள்ள சபைகளுக்கு தனிப்பட்ட பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.

இந்த குற்றச்சாட்டுக்களை போதகர் மறுத்துள்ளார். தான் ஒரு சதத்தை கூட எடுக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

இவர் ஆரம்பித்துள்ள சபை மற்றும் சுவிஸர்லாந்தில் உள்ள ஏனைய சபைகள் ஒரு சங்கமாக இணைந்துள்ளன.

சபைக்கு கிடைக்கும் பணத்தில் நலன்புரி உதவிகள் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

சமூக நலன்புரி பணத்தை போலி ஆவணங்கள் மூலம் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அதிகாரிகள்,

சட்டப்படி எவராவது நலன்புரி உதவிகளை பெறுகிறார்களா என்பதை எம்மால் கூற முடியாது என கூறியுள்ளனர்.

இதனால் இவர்களால், நிதி முறைகேட்டை உறுதிப்படுத்தவோ, நிராகரிக்கவோ முடியவில்லை. சுமார் ஆயிரத்து 200 பேர் நலன்புரி உதவிகளை பெறுவதாக கூறப்படுகிறது.

எனினும் போலி ஆவணம் மற்றும் நலன்புரி நிதி மோசடி தொடர்பாக வருடாந்தம் 30 குற்றவியல் வழக்குள் பதிவு செய்யப்படுகின்றன.

கெனிசார் அதிகாரிகள், குமார் வில்லியம்ஸூக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்கலாம். சமூக நலன்புரி அலுவலகம்,

முரண்பாடுகளை அடையாளம் கண்டுள்ளதுடன் ஆவணங்களை போலியாக தயாரிப்பது, சமூக நலன்புரி நிதியை தவறாக பயன்படுத்துவது தொடர்பாக குற்றச்சாட்டை தாக்கல் செய்துள்ளது.

மத போதகருக்கு எதிராக ஒரு விசாரணையை மட்டும் நடத்தக் கூடாது. பாதிக்கப்பட்ட 13 வயதான சிறுமியும் தன்னை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய வில்லியம்ஸூககு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம்.

அறைக்குள் சிறுமியுடன் தகாத உறவை வைத்துக்கொள்வது சட்டப்படி குற்றமாகும். இதனால், சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேவேளை போதகர் குமார் வில்லியம்ஸ் தனது சபையினரை சமாதானப்படுத்த முயற்சித்து வருவதாக தெரியவருகிறது.

அவரது உண்மை தன்மை குறித்து சரியாக புலப்படவில்லை. அவர் தனது சபையில் நடத்திய போதனையில் தனக்கு எதிராக குற்றச்சாட்டு பற்றி கூறியதாகவும் தெரியவருகிறது.

அத்துடன் அவர் இளைஞர்களுடன் மதுபானம் அருந்தி விட்டு டிஸ்கோவுக்கு சென்றுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது எனவும் சுவிஸர்லாந்தின் தேசிய தொலைக்காட்சியான SRF ஊடகவியலாளர் குறிப்பிட்டதாக தமிழ் கிறிஸ்தவ சபை ஒன்றின் போதகர் தனது அங்கத்தவர்களிற்கு போதனையின் போது குறிப்பிட்டுள்ளார். ஆனால் அப்படி ஒரு வினாவினை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சுவிஸர்லாந்தின் தேசிய தொலைக்காட்சியான SRF ஊடகவியலாளர் கேட்க வில்லை என அவ் ஊடகத்தின் நிகழ்ச்சியில் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.