ஐரோப்பிய நாடொன்றை உலுக்கிய பெரும் அனர்த்தம்! அவதியுறும் மக்கள்

தென்கிழக்கு ஸ்பெயினில் வியாழக்கிழமை இரவு பெய்த்த கணமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 2 பேர் கொல்லப்பட்டுள்ளார். இந்த வெள்ள அனர்த்தினால் மக்களின் அன்றாட வாழ்க்கையும், பொது போக்குவரத்துக்களும் பாரிய அளவில் பாதிப்படைந்துள்ளது

மேலும் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல பாடசாலைகள் மூடப்பட்டன. இதனால் லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக Valencia மற்றும் Murcia பகுதியில் புயல் வலுவாக இருந்தன. வியாழக்கிழமை பலத்த மழையுடன் கூடிய புயல் காரணமாக இரு பகுதிகளுக்கு “சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது.

மேலும், Valencia பிராந்தியத்தில், 84 நகராட்சிகளுக்கான பள்ளிகளை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் 255,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 நகராட்சிகளைக் கொண்ட Murcia பிராந்தியத்தில், அனைத்து பாடசாலைகளும் பல்கலைக்கழகமும் மூடப்பட்டன.

அங்கு, Clariano நதி அதன் கரைகளில் நிரம்பி வழிந்தது. கிராமத்தில் மொய்சென்ட் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன, மேலும் , ரயில் பாதைகள் ஆறுகளாக மாறியது.

கடந்த 1917 ஆம் ஆண்டில் இருந்து Ontinyent பகுதியில் பதிவான கால நிலையில் இருந்து இதுவே மிகவும் மோசமானது என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

உலகின் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து காலநிலை நெருக்கடியை (Climate Emergency) போர்க்கால அடிப்படையில் எதிர்கொள்ள வேண்டும் என்பற்கான மற்றுமொரு எச்சரிக்கை தான் ஸ்பெயின் வெள்ளம் ஆகும்.