கனடாவில் ஸ்காபுறோ நடுவீதியில் ஈவிரக்கமின்றி மனைவியை வெட்டிக்கொன்ற யாழ் சசிகரன்!

கனடாவின் ஸ்காபுறோ நகரத்தில் 27 வயதான தர்சிகா ஜெயநாதன் எனும் தமிழ் இளம் குடும்பப் பெண்ணொருவர் கணவரால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் மாலை ஸ்காபுறோவின் கிழக்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோரிஷ் ஆர்.டி பகுதியில் ஒரு மனிதர் கத்தியை துணியால் சுற்றியபடி தப்பியோடுவதாக ஏராளமான தொலைபேசி அழைப்புக்கள் ரொரண்டோ பொலிசாருக்கு சென்றன.

நடந்து சென்று கொண்டிருந்த தர்சிகாவை கத்தியால் வெட்டிச் சரித்து விட்டு, காரில் ஏறி கொலையாளி தப்பி சென்ற நிலையில் துரிதமாக செயற்பட்ட பொலிஸார் , அவரை மார்கம், மில்னர் அவெனியூ பகுதியில் வைத்து கைது செய்தனர்.

வெட்டப்பட்ட தர்சிகா வீதியில் ஸ்தலத்தில் பலியான நிலையில் அங்கு நின்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

குறித்த கொலையாளி, தர்சிகாவின் முன்னாள் கணவனான சசிகரன் தனபாலசிங்கம் (38) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சசிகரன் தனபாலசிங்கம் நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

இதேவேளை இந்த கொடூரமான தாக்குதலின் ஒரு பகுதியை எட்டு வயது குழந்தை கண்டது.

பொலிசார் வருவதற்குள் தப்பி ஓடிய தனபாலசிங்கம் சிறிது நேரத்திற்குப் கைது செய்யப்பட்ட நிலையில் பொலிஸாரை அவர் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

கைவிலங்கிடப்பட்ட நிலையில் நேற்று மாலை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் பிரதிபலிக்கவில்லை எனவும் , நீதிபதி கேட்டபோது, மெல்லிய குரலில் தனது பெயரை மாத்திரம் உச்சரித்ததாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை சசிகரன்- தர்ஷிகா ஜோடி 2015இல் திருமணம் செய்தார்கள். தர்ஷிகாவை வீட்டு வன்முறைக்குள்ளாக்கி வந்த நிலையில் 2017இல் இருவரும் பிரிந்தனர்.

2017இல் எதிர்கொண்ட இரண்டு வன்முறை சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் இருந்து சசிகரன் 2019 பெப்ரவரியில் விடுவிக்கப்பட்டிருந்த போதும்,, பிணை மீறல்களில் தொடர்ந்து ஈடுபட்டதால் 29 நாட்கள் தடுப்புக்காவலிலும் வைக்கப்பட்டிருந்தார்.

சசிதரனின் தாக்குதlஇல் நிலைகுலைந்த தர்ஷிகா 911 என்ற அவசர இலக்கத்தை அழுத்தி உதவிகோர முயன்றபோதும், அவரது அலறல் சத்தம்தான் பதிவாகியதாகவும், அந்த சத்தமும் வழக்கில் சாட்சியாக இணைக்கப்படுவதாகவும் பொலிசார் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

மேலும் செப்ரெம்பர் 18ம் திகதி சசிதரன் மீண்டும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.