கிளிநொச்சி திருமண வீட்டில் இடம்பெற்ற சம்பவம் – சந்தேக நபருக்கு கடும் நிபந்தனை

கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் திருமண நிகழ்வொன்றில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பணத்தினை கொள்ளையிட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.

கனகபுரம் பகுதியில் அமைந்துள்ள நண்பர்கள் விருந்தினர் விடுதியில் கடந்த ஜூன் மாதம் 05ம் திகதி நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பெருந்தொகை நிதி கொள்ளையிடப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த கிளிநொச்சிப் பொலிசார் விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமரா பதிவுகளின் அடிப்படையில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட நபர் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது , குறித்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்

இந்நிலையில் குறித்த வழக்கு நேற்று முன்தினம் நீதிவான் ரீ. சரவணராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

iஇதன்போது கிராம அலுவலர் வதிவிடத்தை உறுதிப்படுத்திய இருவரின், தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான ஆட்பிணைகளிலும், இருபத்தி ஐயாயிரம் ரூபா பெறுமதியான காசுப்பிணையிலும் செல்லுமாறும் சந்தேக நபர் கடும் நிபந்தனைகளுடன் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த வழக்கின் விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 13ம் திகதிக்கு ஒத்திவைக்கபப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.