நூடில்ஸ் சாப்பிட்டதால் ஏற்பட்ட விபரீதம்! கிராமமே குழப்பத்தில்! எச்சரிக்கும் மருத்துவர்கள்!

விழுப்புரம் மாவட்டம் வானூர் மொரட்டாண்டி முந்திரி காட்டு பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்ற நான்கு பசு மாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளன.

நான்கு பசு மாடுகளும் உயிரிழந்ததன் காரணம் தெரியாமல், மக்கள் தவித்திருந்த நிலையில் கடந்த புதன் கிழமை மேய்ச்சலுக்கு சென்ற மேலும் மூன்று பசு மாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக உயிரிழந்துள்ளது.

தொடர்ச்சியாக ஏழு பசு மாடுகள் உயிரிழந்ததை அடுத்து அந்த பகுதி மக்கள் கால்நடை மருத்துவருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த கால்நடை வைத்தியர்கள் உயிரிழந்த பசுக்களின் வயிற்றை பரிசோதனை செய்தபோது இரைப்பையில் ஜீரணமாகாத நூடில் தேங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் மாட்டிற்கு நூடில் கொடுத்தது யார் என்று கேள்வி எழுப்பப்பட்டபோது மேய்ச்சலுக்கு சென்றிருந்த போது மேய்ந்திருக்கும் என அந்தப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து முந்திரிக்காட்டுப்பகுதிக்குள் சல்லடைபோட்டு தேடிய போது அங்கே ஏப்ரல் மாதத்துடன் காலாவதியான நூடில் பக்கெட்டுக்கள் வீசப்பட்டிருந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்தது.

அதனை சாப்பிட்டதால்தான் மாடுகள் இறந்திருக்கக்கூடும் என்றும் காலாவதியான அந்த நூடில்சில் என்னென்ன இரசாயன மாற்றங்கள் நிகழ்ந்து மாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்பது குறித்தும் ஆராய இரைப்பையில் இருந்து சேகரிக்கப்பட்ட நூடில்ஸ் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதே நூடடில்சை மனிதர்கள் பயன்படுத்தியிருந்தாலும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என மருத்துவர்கள்கள் எச்சரித்துள்ளனர்.

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட எந்தவொரு உணவுப்பொருட்களை வாங்கும்போது அதன் காலாவதி திகதியை பார்த்து வாங்குவது ஒவ்வொரு நுகர்வோரின் முக்கிய கடமையாகும்.

அதாவது பாக்கெட்டில் அடைக்கப்படும் உணவுப்பொருட்கள் நீண்ட நாட்கள் பழுதடையாமல் இருப்பதற்காக அதில் கலக்கப்படும் இரசாயன பொருட்கள் நாளடைவில் மெல்லக்கொல்லும் விசமாக மாறும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.