கொட்டாஞ்சேனை- ஆமர் – பாபர் சந்தி முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதால், அங்கு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அவர் பொது மக்களை கோரியுள்ளார்.
கொழும்பில் கடும் வெள்ளம்! கொட்டாஞ்சேனை உட்பட பல வீதிகளில் வாகன நெரிசல்
கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தையடுத்து கொட்டாஞ்சேனை- ஆமர் – பாபர் சந்தி முழுமையாக நீரில் மூழ்கி கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
திங்கட்கிழமை மதியம் பாபர் வீதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கொட்டாஞ்சேனை முதல் புறக்கோட்டை நவலோக சந்திவரையான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனை கட்டுப்படுத்துவதற்காக புறக்கோட்டை, டாம் வீதி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் குணசிங்கபுர தனியார் பேரூந்து நிலையமும் பகுதி அளவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.






