பிகாரில் இறந்த நபர் புதைத்த 13 தினங்களுக்கு பிறகு உயிருடன் எழுந்த வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ்குமார். இவர் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் திகதி காணமல் போயுள்ளார். இவரது பெற்றோர்கள் பொலிசில் புகார் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு களைத்து அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைக்க சஞ்சீவ்குமாரின் தந்தை சென்று பார்த்து அது சஞ்சீவிதான் என உறுதி செய்துள்ளார். உடனடியாக பிணத்தை வீட்டிற்கு எடுத்துவந்து சுடுகாட்டில் வைத்து இறுதிச்சடங்குகளை முடித்துள்ளார்.பிறகு 13 ஆம் நாள் காரியம் செய்ய வீட்டில் அணைத்து வேலைகளையும் தயார் செய்ய அவருக்கும் குடும்பத்தாருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.
இதைத் தொடர்ந்து, தொலைந்து பொய் இறந்து விட்டதாக கூறப்பட்ட சஞ்சீவ்குமார் திடீரென குடும்பத்தார் கண்முன் வந்து நின்றுள்ளார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தார் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.மேலும் அவர்கள் புதைத்த சடலம் வேறொருவருடையது என தெரியவந்தது. மேலும் அவர் திரும்பி வீட்டிற்கு வந்ததில் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.






