யாழ் பாலாலி விமான நிலையத்திற்கு மீண்டும் கிடைத்த வரப்பிரசாதம்! அமைச்சரவையில் முக்கிய அறிவிப்பு

இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது யாழ். பாலாலி விமான நிலையத்தில் 300 மில்லியன் டொலர் செலவில் மொபைல் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் (ஏ.டி.சி.) ஒன்று அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது.

குறித்த அமைச்சரவை பத்திரத்தை சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தாக்கல் செய்திருந்தார்.

இலங்கைக்கும் – இந்தியாவுக்கும் இடையிலான பிராந்திய விமான சேவைகள் ஒக்டோபர் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ் பாலாலி விமான நிலையத்திற்கான வேலைகள் துரிதப்படுத்தப்பட்டாலும் அரசின் உதவிகள் மிக விரைவாக கிடைப்பது எமது பகுதிக்கு கிடைத் பெரும் வரப்பிரசாதம் என அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.