கொழும்பில் சிக்கினார் ராஜ்சங்கர்! முழுமையான விபரம்! இவரைத் தெரியுமா??

திருகோணமலையை சேர்ந்த ராஜ்சங்கர் என்பவர் தான் வேலை செய்து வந்த நிறுவனத்தில் இருந்து பலகோடி ரூபாய்களை சுருட்டிக்கொண்டு குடும்பத்துடன் இலங்கையில் இருந்து தலைமறைவாகி உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

குறித்த நபர் புலம்பெயர்ந்த தேசத்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் சர்வதேச நிறுவனத்தில் வேலை பார்த்துவந்துள்ளார்.

இந்நிலையில் இவரின் சகாவான தருமரத்தினம் ஜெயராஜ் என்பவரும் இதற்கு உடந்தையாக செயற்பட்டுவந்த நிலையில் தற்பொழுது அவர் இலங்கையில் ஒளிந்து உள்ளதாகவும் சொல்லப்படுகின்றது.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு நூற்றுக்கணக்கான வீடுகளை இலவசமாக அமைத்துக்கொடுத்து தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும்கட்டி எழுப்பவேண்டும் என அந்த நிறுவனத்தின் தர்ம ஸ்தாபன கிளை முடிவு செய்தது.

இதன்போது அந்த பொறுப்பை தானே செய்வதாக ராஜ்சங்கர் என்பவர் ஏற்றுகொண்டதோடு , வீடு கட்டும் செயல் திட்டங்களையும் அவர் வன்னியில் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் அவர், தெரிவு செய்த இடங்கள் மரங்கள் நிறைந்த அடர்ந்த காட்டுப்பகுதிகள் எனவும், குறித்த இடங்களில் அவர் காடழிப்பு செய்ததுடன் பெறுமதி மிக்க காட்டு மரங்களைவெட்டி விற்றதும் தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த நபர் பாரிய மணல் கொள்ளையிலும் ஈடுபட்டமை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதேவேளை ராஜ்சங்கர் மீது அதீத நம்பிக்கை கொண்டதால் நிறுவனம் அவரை கண்காணிக்க தவறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் , கட்டி முடிந்த வீடுகளை வழங்க வறிய மக்களை தெரிவு செய்யும் செயலிலும் ஈடுபட முனைந்த ராஜ்சங்கர் , மிகவும் கீழ்த்தரமான வழிகளையும் கையாள தொடங்கியதாகவும் தெரிவிக்கப்டுகின்றது.

இந்த தகவல்களை ஆதாரபூர்வமாக அறிந்து அதிர்ச்சியடைந்த குறித்த புலம்பெயர்ந்த தேசத்து நிறுவனம், இவரை பணியிடை நீக்கம் செய்து உடனடியாக விசாரணைக்கு அழைத்ததோடு மட்டுமல்லாது இலங்கை பொலிஸ் துறையிலும் முறைப்பாடுகளை செய்ததாக அறியக்கிடைத்துள்ளது.

அதோடு மோசடியாளர்களான ராஜ்சங்கர் அல்லது ஜெயராஜ் குறித்த தகவல்கள் அறிந்தால், உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறும் குறித்த நிறுவனம் கோரிக்கைவிடுத்துள்ளது.

மேலும் அவர்களைப்பற்றிய தவகல்களை வழங்குவோரிற்கு சன்மானம் ஒன்றை வழங்கவும் பும்பெயர் நிறுவனம் முன்வந்துள்ளதாக அறிய முடிகின்றது.

இதேவேளை குறித்த நபர் தொடர்பில் பத்திரிகைகளிலும் அறிவிப்பு வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.